ஒருவருமே அரைசதம் எடுக்காத நிலையில் ,133 ரன்களை குவித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
14 வது ஐ.பி.எல் தொடரின் , 18 வது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், பீல்டிங்க்கை தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – சுக்மன் கில் ஜோடி களமிறங்கியது. இதில் சுப்மன் கில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிபாதி, ரானாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்பிறகு ரானா 22 ரன்களை எடுத்து, சேத்தன் சகாரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 36 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் ,ரசல் 9 ரன்கள் ,கேப்டன் மோர்கன் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்துள்ளது. அடுத்து களமிறங்கிய உள்ள ராஜஸ்தான் அணி 134 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.