6 விக்கெட் வித்தியாசத்தியல் கொல்கத்தாவை வீழ்த்தி ,ராஜஸ்தான் அணி 2 வது வெற்றியை கைப்பற்றியது .
நேற்று நடைபெற்ற , 18 வது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின . மும்பை வான்கண்டே மைதானத்தில், நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், பீல்டிங்க்கை தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – சுக்மன் கில் ஜோடி களமிறங்கியது. இதில் சுப்மன் கில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிபாதி, ரானாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்பிறகு ரானா 22 ரன்களை எடுத்து, சேத்தன் சகாரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 36 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் ,ரசல் 9 ரன்கள் ,கேப்டன் மோர்கன் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்துள்ளது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 134 ரன்களை இலக்காக கொண்டு விளையாடியது .
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இதில் பட்லர் 5 ரன்கள் ஜெய்ஸ்வால் 22 ரன்கள் , ஷிவம் துபே 22 ரன்கள் மற்றும் திவாடியா 52 ரன்கள் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க, மறுபுறம் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் மில்லர் இணைந்து ,இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை விளையாடின. இறுதிகட்டத்தில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை குவித்து ,ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,ராஜஸ்தான் தன்னுடைய 2வது வெற்றியை கைப்பற்றியது.