Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS DC : டெல்லி கேப்பிட்டல்ஸ் 11 ஓவரில் 4 விக்கெட் இழப்பு …! 79 ரன்கள் குவிப்பு …!!

மும்பையில் இன்று ,ராஜஸ்தான் ராயல்ஸ்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதல் 

14வது  ஐ.பி.எல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கன்டே  மைதானத்தில் ,  தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.

தொடக்க வீரர்களான பிருத்வி ஷா -ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர்  .இதில் பிருத்வி ஷா 5 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ,அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார் .இதன் பிறகு தவான் 11 பந்துகளில் 9 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .டெல்லி அணி 5 ஒவேரிலே 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை எடுத்துள்ளது .

அடுத்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பந்த் -அஜீக்யா ரஹானே களமிறங்கினர் .ரஹானே 8 பந்துகளில் 8 ரன்களை எடுத்து வெளியேறினார் .இதன் பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் 11.3 ஓவரில் 4 விக்கெட் இழந்து  79 ரன்களை எடுத்துள்ளது .




		

Categories

Tech |