நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை:
நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன் இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்திருந்தது.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 85 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் டிவாட்டியா 53 ரன்கள் எடுத்தார். இதில் கேம் Changer ஆக டிவாட்டியா திகழ்ந்துள்ளார். முதல்கட்டமாக சரியான முறையில் விளையாடாமல், ரசிகர்களை டிவாட்டியா கடுப்பேத்த, எப்போது இவர் அவுட் ஆவார் என்பது போல அவரை வில்லனாக ரசிகர்கள் சித்தரித்து வந்தனர்.
ஆனால் அத்தனைக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, சிக்சர் மழை பொழிந்து வில்லனாக திகழ்ந்தவர் ரசிகர்களுக்கு ஹீரோவாக மாறிப்போனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்ச்சரும் சிறப்பாக பேட்டிங் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிலும் குறை சொல்வது போல் ஆட்டம் இல்லை. மயங்க் அகர்வால் சதம் அடித்து ரசிகர்களை கவர்ந்தார். கேஎல் ராகுல் அவரது சிறப்பான ஆட்டத்தை விளையாடினார் .
பஞ்சாபி அணியை பொருத்தவரையில், ஃபில்டிங் மிகத் தரமாக இருந்தது. குறிப்பாக பஞ்சாப் அணியின் வீரரான பூரான் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தான்சமூக வலைதளங்களில் இன்றைக்கு ட்ரெண்டிங். ஆக மொத்தம் நேற்றைய தினம் போட்டி ஒரு கிரிக்கெட் ரசிகராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களை மகிழ்ச்சியின் உச்சகட்டத்திற்கு கொண்டு போயிருக்கும்.