ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு அதிகமான வசூலித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை கடந்த வாரம் ஜப்பானில் வெளியிட்டுள்ளனர் அதற்காக இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்றோர் ஜப்பான் நாட்டிற்கு சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்களுடன் சந்திப்பு போன்றவற்றை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாகுபலி 2 அளவிற்காவது படம் வசூலிக்குமா என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் கடந்த நான்கு நாட்களில் சுமார் 4 கோடி வரை மட்டுமே வசூல் சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் 2 கோடி வரை பங்கு தொகையை கொடுத்திருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷன்காக மட்டுமே 5 கோடி வரை செலவு செய்திருக்கின்றார்களாம் அந்த செலவையாவது படம் வசூலித்து விடுமா என பேச ஆரம்பித்து விட்டனர். ஆஸ்கார் விருது போட்டியிலும் நேரடியாக கலந்து கொள்ளும் ஆர் ஆர் ஆர் படத்தை உலக அளவில் பிரபலப்படுத்தி பான் வேர்ல்ட் இயக்குனராகும் முயற்சியில் ராஜமௌலி இருக்கிறார் என தெரிவிக்கின்றனர் ஆனால் ஜப்பான் வசூல் ஏமாற்றத்தை தான் தரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.