ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டதால் படக்குழுவினருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் மற்றும் அலியாபட் ஆகியோர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த பிறகு ஏப்ரல் மே மாதங்களில் இந்த படம் வெளியிட வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு காரணமாக படக்குழுவினருக்கு சுமார் 150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தைப் பொருத்தவரை கதாநாயகர்களின் சம்பளமே 100 கோடியை தாண்டியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் தலா 60 கோடி சம்பளமாக பெறுகின்றனர். எனவே படத்தின் ரிலீசுக்கு பிறகு பாதி சம்பளத்தை பெற்றுக் கொள்ளுமாறும் தற்போதைக்கு பாதி சம்பளத்தை வாங்கிக் கொள்ளுமாறு கதாநாயகிகளிடம் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளதால் படத்திற்கு அதிக அளவு முதலீடு செய்துள்ளதாகவும் எனவே சம்பளத்தில் கதாநாயகர்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமெனவும் படக்குழுவினர் கேட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு கதாநாயகர்களும் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.