Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் ….! ரசிகர்கள் ஷாக் ….!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள  ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியாகயுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்).இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் ,ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் ரிலீசுக்கு தயாராக உள்ளது .இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜனவரி 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது .

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இப்படத்தை ஏப்ரல் மாதம் திரையிட படக்குழு முடிவு இருப்பதாகவும் ,விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |