Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலி_ யின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவை நோக்கி திரும்ப செய்தவர் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி 1,2 ஆகிய இரண்டும் மிக பெரிய வெற்றியை கண்டது. இவருடைய படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் போன்ற அம்சங்கள் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. மேலும் இவர் பாகுபலி படத்திற்கு முன்பாகவே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில், தெலுங்கில் பிரபல  கதாநாயகரான  ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படம் ‘ஆர்.ஆர்.ஆர். இப்படத்தினை டிவிவி தானய்யா தயாரிக்கிறார்.

  à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

 

மேலும் இந்த படத்தில் ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை டேய்சி ஜோன்ஸ், ஆகியோர் நடித்து வரும் நிலையில் புதிதாக இரண்டு பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.  இதை தொடர்ந்து சஞ்சய் தத் மற்றும் வருண் தவான் இருவரும் இப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தினை பற்றிய தகவல் விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கினறனர் . மேலும் இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |