Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம தலைவர் எப்பவுமே கெத்து தான்!…‌ ஜப்பானில் ரஜினியின் “முத்து” பட சாதனையை வீழ்த்த முடியாத RRR…!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மீனா லீடிங் ரோலில் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், தற்போதும் முத்து படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி கிரஷ் உண்டு. இந்நிலையில் ரஜினி நடித்த முத்து திரைப்படம் முதன்முதலாக ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆன போது 22 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது.

இந்த படத்திற்கு பிறகு ஏராளமான படங்கள் ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆனாலும் ரஜினியை முத்து படம் அளவிற்கு இல்லை என்று தான் சொல்கிறார்கள். ஏனெனில் முத்து படம் ரிலீசுக்கு பிறகு ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் மன்றங்கள் உருவானது. இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக பட குழு ஜப்பான் நாட்டிற்கு சென்ற நிலையில், 20 கோடி கூட வசூல் தாண்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் ரஜினியின் முத்து படம் ஜப்பானில் புரிந்த சாதனையை இதுவரை எந்த ஒரு இந்திய படங்கள் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |