Categories
உலக செய்திகள் சற்றுமுன் பல்சுவை

ரூ. 0 கூட கிடையாது… கொதறிய கொரோனா…. உலக வரலாற்றில் பேரதிர்ச்சி ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0 டாலருக்கும் கீழே சென்றுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் நிலைகுலைந்துள்ளது. கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடக அமெரிக்கா இருந்து வருகின்றது. அதோடு அல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் பங்குச்சந்தை ( திங்கள்) நேற்று தொடங்கியதும் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவில் சென்றது. அமெரிக்காவில் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பேரல் (-39.14 டாலர்) அதாவது ரூ. 0க்கும் கீழ் சென்றது. அதே போல அங்குள்ள (Brent) பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலையும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

உலகளவில் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் முதல்முறையாக ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது இது தான் முதன்முறை. இதனால் அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் முடங்கி கிடைக்கும் இந்த நேரத்தில் கச்சா எண்ணையின் தேவை குறைந்து தேக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கு காரணமாக தேக்கமான கச்சா எண்ணையை சேமித்து வைக்கக்கூட இடமில்லாமல் இப்படி ஒரு சரிவை கண்டுள்ளது.

Categories

Tech |