தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கனடா டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். “மொழி வளர கைகொடுங்கள்” என்று டொரெண்டோ பல்கலைக் கழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.