முன்னாள் தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
நேற்று முன்தினம் (23-ம் தேதி) நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் என்பவருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்து விட்ட நிலையில் வீட்டு வேலை செய்து தனது 3 மகளையும் படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதையடுத்து ஸ்டாலின் உமா மகேஸ்வரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் 3 பேரையும் கொலைசெய்த வர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் நெல்லையில் கொல்லப்பட்ட முன்னாள் தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.