Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம்… ஒரு மாத ஊதியம்… மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு…!!

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர். மேலும் அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |