விசிக சார்பாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நீதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள பல பிரபலங்களும், நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த 2 எம்பி மற்றும் 4 எம்எல்ஏக்கள் சேர்ந்து தங்களது சார்பாக 10 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.