Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 100 …” தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு”… அரசு அதிரடி..!!

அசாமில் மாணவ மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்தால் நூறு ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் பயின்று வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா குறைந்ததன் காரணமாக மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

பல பெற்றோர்கள் கல்வி பாதிக்கப்பட்டாலும், பிள்ளைகளின் உயிர் முக்கியம் என்று அவர்களை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் வசம் திருப்புவதற்காக அசாம் மாநில அரசு தினமும் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்களுக்கு 100 ரூபாய் வழங்குவது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. இதனை பெற்றோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |