Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ100.. “வைகோவுடன் செல்பி” மதிமுகவினர் அட்டகாசம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் செல்பி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதி தர வேண்டும் என்று மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மதிமுகவின் உறுப்பினர் பதிவு குறித்து விவாதிப்பதற்காக மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர் பதிவுகள் குறித்தும், தற்பொழுது இருக்கக்கூடிய மதிமுக உறுப்பினர்களின் வாழ்நாள் உறுப்பினர் பதிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனைத்து மதிமுக உறுப்பினர்களும் வாழ்நாள் உறுப்பினராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Image result for selfie vaiko

இதை தொடர்ந்து மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தொண்டர்களும் மதிமுக உறுப்பினர்களும் சால்வை அணிவிப்பதற்கு பதிலாக, அதை வாங்கும் பணத்தை நிதியாக மதிமுகவிற்கு வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வைகோவுடன் செல்பி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்சம் நூறு ரூபாய் நிதியை மதிமுகவிற்கு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |