தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 21 – 28ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த தளர்வும் கிடையாது, பொதுமுடக்கம் நீடிக்கும்.
என்னென்ன கட்டுப்பாடுகள்:
காய்கறிகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்கில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தடை கிடையாது. சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை.
ரூ.1000 நிவாரணம்:
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குடும்ப அடடைதரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.
எந்த பகுதிகளில் கட்டுப்பாடு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முழு பொது முடக்கம் அமலில் இருக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம்,கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளில் பொதுமுடக்கம் தொடரும். காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழுவதும் அமல்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் தொடரும்.
திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் பொதுமுடக்கம் இருக்கும். பூவிருந்தவல்லி, சோழவரம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமுடக்கம் நீடிக்கும் என்று தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.தமிழக மருத்துவர் வல்லுநர் குழுவும் இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அடுத்த தமிழக அரசு தற்போது 4 மாவட்டங்களுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.