தமிழகத்தில் அதிகமான மின்சார கட்டணம் வசூலிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் அதிகம் வசூல் செய்யப்படுகின்றது என திமுக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளை; தமிழக அரசு தப்பிக்க முடியாது என்ற தலைப்பில், அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
இந்த நிர்பந்தத்தின் காரணமாகவும், இது கத்திரி வெயில் காலமாக இருந்ததாலும் பெரும்பாலான வீடுகளில் 24 மணி நேரமும் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அதனால் மக்களின் மின்சார பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கணக்கீட்டு வரம்பை காரணம் காட்டி மின் கட்டணம் தாறுமாறாக வசூலிப்பது நியாயமற்ற அணுகுமுறை. மேலும், மிகக்குறைந்த யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திய வீடுகளில் கூட பல மடங்கு கட்டணம் செலுத்த வேண்டுமென வந்துள்ளது.
பூட்டியே கிடந்த வீடுகளுக்கு கூட மின்கட்டணம் ரூபாய் ஆயிரம், இரண்டாயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முறைப் படுத்தப்பட வேண்டும். எனவே மின்சார வாரியம் கணக்கீடுகளை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு அரசு நிர்பந்தபடுத்திய ஊரடங்கால் ஏற்பட்ட ஒட்டு மொத்த மின் கட்டணத்தையும் அரசு தள்ளுபடி செய்திருக்க வேண்டும். கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை இத்தகைய கணக்கிடும் முறையை செயல்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அதனால் மக்களின் மின்சார பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், கணக்கீட்டு வரம்பை காரணம் காட்டி மின்கட்டணம் தாறுமாறாக வசூலிப்பது நியாயமற்ற அணுகுமுறை. #CPIM #ebbill #TNEB https://t.co/wuakbrgFm2 pic.twitter.com/y00TwMZIEV
— CPIM Tamilnadu (@tncpim) June 5, 2020