தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள சுமார் 3 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
111 குளிர்பதன கிடங்குகள் மூலம் காய்கறி, பழங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 30ஆம் தேதி வரை குளிர்பதன கிடங்கில் காய்கறி, பழங்களை பாதுகாக்க கட்டணம் வசூல் செய்யப்படமாட்டாது. பல்வேறு நலவாரியங்களில் உள்ள 7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.பட்டாசு தொழிலாளர்கள் 1.20 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.