Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் ரூ.10,000… இலவச ஸ்மார்ட் போன்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அனைத்து மாணவர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்குவங்க மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் 10,12ம், வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் லேப்டாப் வழங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல் போன் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழி கல்வி தொடர்பாக பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆன்லைன் கல்வி வகையே செயல்பட்டு வருகிறது.  ஏழை மாணவர்களுக்கு ஆன்-லைன் வழிக் கல்வி பெறுவதற்கான வசதிகள் இல்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது: “சீன பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக மற்ற பிராண்டுகளை சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. எனவே ஸ்மார்ட்போன் வாங்க மாணவர்களிடம் நேரடியாக பணத்தை கொடுக்க முடிவு செய்துவிட்டோம். மூன்று வாரங்களுக்குள் மாணவர்களின் வங்கிக்கணக்கு நேரடியாக பணம் அனுப்பப்படும். மாணவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான ஸ்மார்ட்போன் அல்லது டேப் வாங்கிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |