Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ 100,00,00,000 வசூல் சாதனை … அடிச்சு தூக்கிய “விஸ்வாசம்” ..!!

ரூ . 100 கோடி  வசூல் சாதனை செய்து இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படம்  பெற்றது .

சிறுத்தை சிவா இயக்கத்தில்  அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று  ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை  செய்தது . இதனால் இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை “விஸ்வாசம்” படம் பெற்றது.

Image result for viswasam

இதனால் அஜித் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர் . இந்த படத்தின் வெற்றியையும், வசூல் சாதனையையும் இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி இயக்குனர் சிவா ஒரு படவிழாவில் பேசும்போது, ‘‘விஸ்வாசம் படம் ரூ.100 கோடி வசூலித்ததில்  முக்கிய பங்கு இசையமைப்பாளர் டி.இமானுக்கு உள்ளது என்றார்.

Image result for viswasam

 

அவர் இசையமைத்த ‘‘கண்ணான கண்ணே’’ என்ற இனிமையான பாடலும் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறினார் . இதற்காகவே இமானுக்கு ரூ.50 கோடி சம்பளமாக கொடுக்கலாம்’’ என்றும் அவர் பேசினார். 

Categories

Tech |