தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறியவர்களிடம் அபராதமாக 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மீறியதாக இதுவரை 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 ரூபாய் அபராதம் விதித்து தமிழக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதுவரை ஊரடங்கை மீறியதாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சம்மந்தப்பட்டவர்களிடம் வாகனகளை ஒப்படைக்க கூடிய பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றார்கள். அதே போல போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்த பிறகு அந்த வாகனங்களை ஒப்படைக்க கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல 5 லட்சத்து 44 ஆயிரத்து 566 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.