Categories
மாநில செய்திகள்

ரூ 105,72,00,000 பறிமுதல்….. தேர்தல் அதிகாரி தகவல்…..!!

தமிழகத்தில் இதுவரை ரூபாய் 105.72 கோடி பணம் மற்றும் 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில்  இதுவரை சுமார் ரூ.105.72 கோடி கைப்பற்றப் பட்டுள்ளது. ரூ.227.45 கோடி மதிப்புள்ள 803 கிலோ தங்கம் மற்றும் 478 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 5-ந் தேதி மட்டும் கோவை மாவட்டத்தில் 149 கிலோ தங்கம் பிடிபட்டது. தூத்துக்குடியில் ரூ.37 லட்சம், தர்மபுரியில் ரூ.1.5 கோடி கைப்பற்றப்பட்டது.
கோடி, க்கான பட முடிவு

முறையான அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக 3,246 வழக்குகளும், பணம், பரிசு பொருட்களை கொடுத்ததற்காக 302 வழக்குகளும், தேர்தல் விதிமீறல் குற்றத்துக்காக 291 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் நடவடிக்கை தொடர்பாக 3,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |