செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள்.புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20 சதவீதம் இந்த மாநில அரசினுடைய நேரம் முடிந்து விட்டது. இப்போது அனைத்து மகளிருக்கும் நான் 1000 ரூபாய் கொடுப்பேன், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பாதி விஷயங்கள் பார்டரை தாண்டி போயாச்சு, 10,000 ரூபாய் கொடுப்பது செய்ய முடியாது. பெண்களுக்கு 2.25 கோடி ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மாதம் 2,250 கோடி, வருடத்திற்கு 28 ஆயிரம் கோடி, 5 வருடத்திற்கு 1 லட்சத்து 14,000 கோடி. தமிழ்நாட்டின் உடைய பட்ஜெட்டே 3 லட்சம் கோடி. இது சாத்தியமற்றது, செய்யவே முடியாது.
இது எல்லாமே செய்ய முடியாது. இதனால் உங்களுடைய நிதி வலுவிழந்து போகும். பள்ளிக்கு போகின்ற பணத்தை அங்கே போட மாட்டீர்கள், கல்வியின் உடைய கட்டமைப்பை குறைப்பீர்கள், சாலைக்கு போடுகின்ற பணத்தை போட மாட்டீர்கள், நல்ல சாலைகள் இருக்காது.
இது அனைத்தையும் தான் சுப்ரீம் கோர்ட் ஒருங்கிணைத்து நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். 10,000 ரூபாய் மாதம் மாதம் ஒன்றாம் தேதி கொடுத்திடுவேன். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து இருந்தால் மட்டும் போதும் என்று சொன்னால் என்னை பொருத்தவரைக்கும் அதற்கு கிரிமினல், இலவசம். தமிழ்நாட்டில் 506 தேர்தல் வாக்குறுதியில் பாதி விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது என தெரிவித்தார்.