கேரள அரசின் கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி யில் முதல் பரிசு ரூபாய் 12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இதற்கான குலுக்கள் திருவவனந்தபுரம் மேயர் ஆரியா ராஜேந்திரன் நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுக்கு டிக்கெட் கிடைத்தது. இந்த டிக்கெட் தமிழக எல்லையான ஆரியங்காவு பகுதியில் தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி கடையில் விற்பனையாகி உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார். நெல்லை மாவட்டத்தில் விற்பனை ஆகி இருந்தால் சபரிமலை அல்லது ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலுக்கு வந்த பக்தர்கள் வாங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவரை அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை தெரியவில்லை. அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.