Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதிஉதவி!!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது .

சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும்   உடல்  கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு , தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் ரூபாயை  வழங்கியது . கலெக்டர் ஜெயகாந்தன்  , இதற்கான காசோலையை இறந்து போன சின்னமாளின் கணவர் கருப்பையாவிடம்  வழங்கினார்.மேலும்,  தற்காலிக செட் அமைத்து கொள்ள ரூ.5 ஆயிரம்  வழங்கியதுடன் , வீடு கட்ட பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூ.2.30 லட்சம்  ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.

Categories

Tech |