அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா இரு சக்கர வாகனம்…. அந்த ஸ்கூட்டர் இருந்தா ஏழைப் பெண்கள் உரிய நேரத்தில், வேலைக்கு போக முடியும். உரிய நேரத்தில் வீடு திரும்புவதற்கு வாகனத்தை கொடுத்தோம், அதையும் நிறுத்தி விட்டார்கள். நாங்கள் 25,000 மானியம் கொடுத்தோம். அறிவுபூர்வமான கல்வி…
அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவச் செல்வங்கள்… அவர்களை திறமையான மாணவச் செல்வங்களாக உருவாக்க வேண்டும். அதற்க்கு அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு ஒரு மடிக்கணினி 12,000 ரூபாய். 52 லட்சம் பேருக்கு வாங்கிக் கொடுத்தோம். அம்மா இருக்கும்போது கொடுத்தார்கள்… அம்மா மறைந்த பின்பு நாங்கள் தொடர்ந்து வாங்கிக் கொடுத்தோம்.
கிராமத்தில் படிக்கின்ற மாணவச் செல்வங்கள், விஞ்ஞான கல்வி, அறிவு பூர்வமான, கல்வி உலகத் தரத்திற்கு ஏற்ற கல்வி… மாணவனுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் சார்பாக 12 ரூபாய் மதிப்புள்ள 52 லட்சம் குழந்தைகளுக்கு கொடுத்த திட்டத்தையும் கைவிட்டார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்தெந்த திட்டத்தை கொண்டு வந்தார்களோ…. அதை எல்லாம் கைவிட்டது தான் ஸ்டாலின் அவருடைய சாதனை. இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்திலே திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்….
கடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 4 ஆண்டுகால ஆட்சி பேரிடர் காலம் என பேசுறாரு. பேரிடர் என்றால் என்ன என்று தெரியும் அவருக்கு ? நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையாக வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தேன். தமிழ்நாடு முழுவதும் வறட்சி. அப்படிப்பட்ட வரட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம், அதுதான் பேரிடர்.
கஜா புயலால் ஏற்பட்ட வெள்ளம்… கடுமையான சேதம் டெல்டா மாவட்டத்தில்…. அதை சீர் செய்ததுதான் பேரிடர் காலத்தில் செய்த சாதனை… அண்ணா திமுக. அதற்குப் பிறகு எல்லாமே முகம் தெரியாத அளவுக்கு மாஸ்க் போட்டுக்கிட்டு இருந்தோம். யாரும் அடையாளம் பார்க்க முடியாது. கொரோனா வைரஸ் தாக்குதல். ஒன்றை ஆண்டுகாலம், அது பேரிடர் காலம். ஸ்டாலின் அவர்களே…. பேரிடர் காலத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில் கையாண்டு, அதை சாதித்தது. பேரிடர் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலினுக்கு அருகதையும் கிடையாது.நீங்க எந்த பேரிடரை சந்திசீங்க என கேள்வி எழுப்பினார்.