முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.245 கோடி பெறப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டதை போல, அனைத்து மாநிலங்களிலும் முதல்வர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. அதில், பெரிய நிறுவனங்கள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.130 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்து. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது.
அதில், 10,824 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குணமடைந்தவர்களின் 1,514 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மும்பை மாநகரில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.