Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 125,00,00,000 செம வசூல்…. ! ”வாரி குவித்த டாஸ்மாக்” 2ம் நாள் விற்பனை ஜோர் ..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 125 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. 1 மாதமாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை இல்லாத அளவாக நேற்றைய விற்பனை 172 கோடியாக இருந்தது. இரண்டாம் நாளான இன்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் இன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் மண்டல வாரியாக நடைபெற்ற மதுவிற்பனையில் சில மாற்றங்கள் இருந்தாலும் ஏறக்குறைய 125 கோடி ரூபாய்க்கு இன்று விற்பனை ஜோராக இருந்துள்ளது. நேற்றைய விற்பனையை விட குறைவாக இருந்தாலும் தமிழகத்தில் வழக்கமான நாட்களில் விற்பனையாகும் 80 லிருந்து 90 கோடி ரூபாயை விட இன்றய மது விற்பனை அளவு அதிகமாகும்.

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையில் 120 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும். இன்றைய இது போன்ற விழாக்கால விற்பனையை விட அதிகமாகும். நீண்ட நாட்களாக மது விற்பனை நடைபெறவில்லை என்பதால் நிறைய பேர் நேற்று அதிக ஆர்வமாக மது வாங்கி குடித்ததால் அதிக விற்பனை என்றும், ஒருத்தருக்கு இவ்வளவுதான் என்று கட்டுப்பாடுகள், நீண்ட நேரம் வெயிலில் நிற்கும் நிலையால் இன்றைய வியாபாரம் குறைந்திருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |