பிகில் திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
GS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற புகாரையடுத்து AGS நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே போல பைனான்சியர் அன்பு செழியன் வீட்டிலும் இந்த சோதனை நடைப்பெற்றது.
நேற்று காலை முதல் தொடங்கிய இந்த சோதனை AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருந்த நடிகர் விஜயை விசாரிக்க அதிகாரிகள் சென்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கு விஜயிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு படப்பிடிப்பும் நிறுத்தபட்டது.
இதையடுத்து விஜயை சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். அதே நேரம் நடிகர் விஜயின் சாலிகிராமம் , நீலாங்கரை இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவந்த நிலையில் இன்று இரண்டாம் நாளாக இந்த சோதனை தொடர்ந்தது. இந்தநிலையில் பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் இன்று காலை 65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது .சென்னையில் உள்ள வீட்டில் 50 கோடியும் , மதுரை வீட்டில் 15 கோடியும் கைப்பற்றப்பட்ட்தாக வருமான வரித்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்த நிலையில், திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் நண்பரான சரவணன் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.