Categories
சினிமா

ரூ.‌ 15 லட்சம் காசோலை மோசடி வழக்கு…. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட்….!!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவருடைய பேரன் துஷ்யந்த் ஆகியோர் மீது காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கவனித்து வரும் நிர்வாகம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு‌ வைத்துள்ளது. இதனையடுத்து துஷ்யந்த் வழங்கிய 15 லட்சம் மதிப்பிலான 2 காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது.

இதன் காரணமாக துஷ்யந்த் மீது புகார் எழுந்த நிலையில், அந்த பணத்தை ராம்குமார் வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் ராம்குமாரும் பணத்தை வழங்கவில்லை. இதன் காரணமாக துஷ்யந்த் மற்றும் ராம்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 2 பேருக்கும் பிணையில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ராம்குமார் மற்றும் துஷ்யந்த் இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |