சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இயதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவ்வொன்றாக வாசித்தார்.
அதில், சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்காக ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு. சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும். இ-பேமெண்ட் முறையை ஊக்கப்படுத்த ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு. ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு ரூபாய் 50,000 கோடி ஒதுக்கீடு.