கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மேலும் 15,000 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சம்பந்தமாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 15,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 21,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்வது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த தொகை மூன்று தவணைகளாக மாநிலங்களுக்கு கொடுக்கப்படும்.
தற்போது மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள இந்த நிதி என்பது எந்த அளவுக்கு போதுமானதாக இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் மாநில அரசுகள் சார்பில் கேட்ட தொகையை கணக்கிட்டு பார்த்தால் இது மிகவும் குறைவான எண்ணிக்கை தான். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்த போது, இது ஒரு ஆரம்ப நிலை தான். நிலைமை மோசமடையும் பட்சத்தில் அடுத்தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆலோசித்து மேலும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.