Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை….. விண்ணப்பிப்பது எப்படி….? SBI வங்கி அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இப்படி வங்கி மட்டும் அல்லாமல் அரசு மக்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி பள்ளி மாணவர்களுக்காக எஸ்பிஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 என்ற ஒரு புதிய திட்டத்தை குழந்தைகளுடைய கல்விக்காக எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி sbi அறக்கட்டளையின் கல்வி சார்ந்த ஒருங்கிணைந்த கட்டளை இயக்கத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கல்வியை தொடர நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 15000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை Buddy4study என்ற நிறுவனம் பங்குதாரராக இருந்து செயல்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம். ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம். முந்தைய கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும். முந்தைய கல்வி ஆண்டின் மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, நடப்பு வருட சேர்க்கை சான்று( கட்டண ரசீது) விண்ணப்பதாரரின் அல்லது பெற்றோரின் வங்கி கணக்கு விவரங்கள், வருமானசான்று விண்ணப்பதாரரின் புகைப்படம்.

விண்ணப்பிப்பது எப்படி…?

முதலில் https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program?ref=HomePageBanner இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். ற்கனவே பதிவு செய்தவர் என்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடியுடன் Buddy4Study இல் உள்நுழைந்து, ‘விண்ணப்பப் படிவம் பக்கத்தை ‘ பார்க்கலாம். ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால் – Buddy4Study இல் உங்கள் மின்னஞ்சல்/மொபைல்/ஜிமெயில் கணக்குடன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது ‘SBI ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022’ விண்ணப்பப் படிவப் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள்.

விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க, ‘விண்ணப்பத்தைத் தொடங்கு’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பின் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அதன் பின் ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ ஏற்று, ‘ப்ரிவியூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த அனைத்து விவரங்களும் முன்னோட்டத் திரையில் சரியாகக் காட்டப்பட்டால், விண்ணப்ப செயல்முறையை முடிக்க ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். எஸ்.பி.ஐ ஆஷா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி அக்டோபர் 15, 2022 ஆகும்.

Categories

Tech |