ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சுமார் 1.30 கோடி சிக்கியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் தீடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக_வினர் சிலர் வருமான வரித்துறை சோதனையை தடுக்க முயன்றதாக சொல்லப்படுகின்றது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு தொடங்கிய இந்த சோதனை இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிறைவு பெற்றது. இதில் , கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு _ ள்ளதாகவும் , அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி பணம் என்றும் வருமான வரித்துறை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் இந்த பணம் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் பணம் வைத்திருந்ததாக கூறி அமமுக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் தேனியில் பரபரப்பு நீடிக்கிறது.