Categories
பல்சுவை

ரூ 1,552 அதிகரிப்பு… வெறும் 8 நாட்கள்….. சோலிய முடித்த தங்கம்….!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சம் பெற்றுள்ளதால் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பீய்த்துக் கொண்டு செல்கின்றது.ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு ராணுவ தளபதி  காசிம் சுலைமானி உயிரிழந்தார். இது உலக நாடுகளிடையே ஒரு பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்கா மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் உலகச் சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.இது மாதிரியான போர் தாக்குதல் போன்ற விஷயங்கள் நடக்கும் போது தங்கத்தின் விலை உயர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருந்து வருகின்றது.

அதே போல் பங்குச் சந்தை வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வருகிறார்கள். எனவே இதுவும் தங்கத்தின் விலையை உயர்த்தும் ஒரு காரணியாக இருந்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 66 ரூபாயும், சவரனுக்கு 528 ரூபாய்யும் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ 31,432-க்கும் , 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 3,929 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது.கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ 1,552 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இது உலக முதலீட்டாளர் கவனத்தை ஈர்த்துள்ளது.

Categories

Tech |