தனது வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம் இருப்பதாக வேட்புமனுவில் பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சி சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், தன் மனைவியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் நகை , மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் சுமார் 3 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு உலக வங்கியிடம் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாக தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.
வேட்புமனுவில் அவர் , தன்னிடம் கைவசம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதாக எழுத்திலும், 176 கோடி ரூபாய் வைத்துள்ளேன் என்று எண்ணிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மோகன்ராஜ், தெரிவிக்கையில் , 2016_ஆம் ஆண்டு தேர்தலிலும் நான் இதையே தான் வேட்புமனுவில் குறிப்பிட்டேன். என் மேல் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது. 100 வருடம் சிறை தண்டனை வழங்கினாலும் ஏற்கிறேன் தெரிந்தே தான் என்னுடைய ரொக்கத்தை குறிப்பிட்டேன் என்பதை ஒப்புக்கொள்வேன் என்று கூறிய இவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.