நாகர்கோவிலில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி பாரபட்சமின்றி சீல்வைத்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகங்கள் டீ கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டு வருவது வழக்கம். அந்த கடைகளை ஏலம் எடுக்கும் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் அங்குள்ள கடைகளில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகம் ஒன்றை வைத்து நடத்தி வந்த உரிமையாளர் ஒருவர் மாநகராட்சிக்கு பல மாதங்களாக வாடகை அளிக்காமல் 5 லட்சத்து 62 ஆயிரத்து 950 ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.
அவரைப் போலவே அதே பகுதியில் டீ கடை ஓட்டல் உள்ளிட்ட வற்றை நடத்திவந்த கடை உரிமையாளர்கள் பலரும் 2 லட்சம் 3 லட்சம் 4 லட்சம் என பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனர். அதை கணக்கில் வைத்து பார்க்கும்பொழுது கிட்டத்தட்ட ஐந்து கடைகள் மொத்தம் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை அதிரடியாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த மாநகராட்சி அலுவலர்கள் மாநகராட்சி ஆணையர் சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் வாடகை தொகை செலுத்தாத 5 கடைகளுக்கும் பாரபட்சமின்றி சீல் வைத்தனர். வாடகை தொகையை செலுத்திவிட்டு பின் சீலை அகற்றி கொள்ளலாம் என்றும் கூறி நோட்டீஸ் அளித்து விட்டு வந்து விட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.