Categories
தேசிய செய்திகள்

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டு தொகை விடுவிப்பு… தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு!

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டுக்கான தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.8255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக ரூ.46 ஆயிரம் (ரூ.4,038) கோடியை மத்திய அரசு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை மொத்தம் உள்ள 28 மாநிலங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசூலிக்கப்படும் வரியை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் மே மாத பங்கீட்டு தொகையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பீகார் மாநிலத்திற்கு ரூ.4,631 கோடி, பிரதியை ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு ரூ.3,630 கோடியும் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது.

28 மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலத்திக்கிற்கு தான் அதிக பங்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று காலை தெரிவித்திருந்தது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |