சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இரண்டு கோடி ரூபாய் சொத்து பிரச்சினையில் சித்தப்பாவின் தலையை வெட்டி தலையுடன் காவல் நிலையத்தில் சகோதரர்கள் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே யூசுப் ரகுமான் என்பவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் இவரது அண்ணன் சகுபர் அலி க்கும் இடையே கோட்டைப்பட்டினத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சகுபர் அலி மகன்களான நியாஸ், ரகுமான் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் புதுவயலில் உள்ள யூசுப் ரகுமானின் இறைச்சிக் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு தனியாக இருந்த யூசுப் ரகுமானை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையுடன் சகோதரர்கள் இருவரும் சாக்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.