கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3வது, 4வது அணு உலை கட்டுமான பணியில் ஒடிசா, பீகார், ஜார்கன்ட் தொழிலாளர்கள் 3 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி கடந்த 4ம் தேதி ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை மீண்டும் தொடர் போராட்டத்தில் இறங்கினர். கைகளில் கம்பு, கட்டைகளோடு போராட்டத்தில் குதித்தனர்.
இதன் காரணமாக பாதுகாப்பிற்கு நின்ற கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா, காவலர் சக்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதையடுத்து, ஐ.ஜி.,சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி.,ஓம்பிரகாஷ் மீனா, சப் கலெக்டர் பிரதிக் தயாள், ராதாபுரம் எம்.எல்.ஏ., இன்பதுரை ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் கலவரத்தில் காயமடைந்த கணவர்களுக்கு முதலவர் நிவாரணம் வழங்கியுள்ளார்.