கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளிப்படுத்துவதில் தாமதித்த 40 மையங்களுக்கு 20 லட்சம் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் மையங்கள் சிலவற்றில் மக்களின் கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.
அதில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதேபோன்று கர்நாடக மாநிலத்திலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வந்ததால் அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் 40 மையங்களுக்கு ரூபாய் 20 லட்சம் அபராதத்தை விதித்துள்ளார். தனியார் மையங்களில் 10,103 பேரின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படவில்லை. இதனால் ஒரு பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 20,20,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.