Categories
தேசிய செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட 12 லட்ச கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 உதவி: மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில், நேரடி தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ .2,000 உதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்த்துள்ளது.

அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளாளர்கள் என பல்வேறு தப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரத்தான் முதலிடத்தில் உள்ளது. மும்பையில் பாதிப்பு எண்ணிக்கையை கேட்டால் மனதை பதபதைக்கச் செய்கிறது.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 118 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்னிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் நேற்று 77 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மும்பையில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்து உள்ளது.

உயிரிழப்புகள் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கட்டுமான தொழிலாளாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட 12 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |