நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இறுதியாக கடந்த மே 30ஆம் தேதி 11 வது தவணை படம் வழங்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் கிசான் தவணைத் தொகை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் மிக விரைவில் பன்னிரண்டாவது தவணைத் தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 12 ஆவதுதவணை 2000 ரூபாய் அக்டோபர் 17ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த தொகை டெபாசிட் ஆனதா என்பதை உறுதி செய்ய இ கேஒய்சி அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதா என்பதை pmkisan.gov.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.