மாதம் ரூ.2000 சேமித்து கடைசியில் 30 லட்சம் வரையிலான பணத்தை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதத்திற்கும் 2000 ரூபாயை சேமிப்பதால் 30 லட்சம் வரையிலும் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான சில திட்டங்கள் இருக்கின்றன. அது குறித்து இங்கே பார்க்கலாம். சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே கொரோனா காலகட்டத்தில் புரிந்திருக்கும். இந்த இக்கட்டான வேளையில் சேமிப்பு பணம் கையில் இருந்தால் பெரும் உதவியாக இருக்கும்.
பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் எங்கு முதலீடு செய்யலாம் யோசிப்பார்கள். பணத்தை விட இதில் சேமிப்பு மிக முக்கியம் என்பது அவசியம். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் சேமித்தால் ஒரு பெரிய தொகையை எந்த திட்டங்கள் மூலம் சேமித்து வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
எஸ்ஐபி முதலீடு:
நீங்கள் குறைந்த அளவு பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் எஸ்ஐபி முதலீடு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும் எஸ்ஐபி சிறந்த தேர்வு. இது முதலீட்டின் அபாயத்தை குறைப்பதோடு நல்ல வருவாயை ஈட்டிக் கொடுக்கும். இதில் சந்தை ஆபத்து அடிப்படையில் வருமானம் கிடைக்கிறது. எனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். சில நிறுவன பல நிறுவனங்கள் எஸ்ஐபி முதலீட்டில் 15 சதவீதம் வரை கொடுப்பதால் நல்ல வருமானம் கிடைக்கிறது.
PPF:
உங்கள் பணத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் ஒரு குறிப்பிட்ட வட்டி வருமானம் கிடைக்க வேண்டுமென்றால் பிபிஎஃப் திட்டம் சிறந்ததாக இருக்கும். இதில் முதலீடு செய்வதனால் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். சுமார் 15 வருடங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு ரூ.25 லட்சம் முடிவில் கிடைக்கும். தேவையெனில் நீங்கள் அதை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.
எல்ஐசி:
எல்ஐசியில் முதலீடு செய்வதால் நன்மை என்னவென்று நான் பார்த்தால் வட்டியுடன் பல சலுகைகள் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. விபத்து காப்பீடு, வரி விலக்கு ஆகியவையும் இருக்கின்றன. எனவே உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
பங்குச்சந்தை முதலீடு:
பங்குச்சந்தையை பற்றி உங்களுக்கு புரிந்து கொண்டால், பங்குச் சந்தையில் ரிஸ்க் எடுக்க முடிந்தால் மட்டுமே நீங்கள் முதலீடு செய்யலாம். இதற்காக நீங்கள் சந்தை நிலவரங்களை கண்காணிக்க வேண்டும். அதற்கு நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தை பெற முடியும்.