Categories
மாநில செய்திகள்

மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு; மீன்பிடித் தொழில்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு – நிர்மலா சீதாராமன்!

மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடுசெய்யப்படுவதாகும் , மீன்பிடித் தொழில்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில்,

விவசாயிகள் பயன்பெற நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 31ம் தேதியுடன் காலாவதியாகும் மீன்பிடித் தொழில் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு போன்றவை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இறால் பண்ணைகளுக்கான பதிவு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும், புதிய மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு நிதி வழங்கப்பட உள்ளன என கூறியுள்ளார். மேலும் 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |