Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2,00,000 கொள்ளை..!!

குளிர்பான கடையின் ஷட்டரை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நகர காவல் நிலையம் அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகர் தொகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான குளிர்பான மொத்த விற்பனை கடை உள்ளது. இவர் வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை கடையை திறப்பதற்காக செல்வம் வந்துபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது, கல்லா பெட்டி உடைக்கப்பட்டு கல்லாவில் வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இது குறித்து நகரக் காவல் துறையினரிடம் செல்வம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி கேமராக்களைப் பார்த்து கடையில் திருடுபோனதை உறுதிசெய்தனர். பின்னர் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சியைக் கொண்டு அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் திருவள்ளூர் பஜார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |