பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே வீட்டில் மின்கட்டணம் 2 லட்சம் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களில் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் ஆஷா போஸ்லே. தற்போது மும்பைக்கு அருகில் உள்ள மலைப் பிரதேசமான லோனாவாலா எனும் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் இந்த வீட்டிற்கு சுமார் 8000 முதல் 9000 வரை மின் கட்டணம் வரும். ஆனால் கடந்த ஜூன் மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆஷா போஸ்லே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மின் வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கமான நபர்களே குடி இருக்கிறோம். புதிதாக மின்சார பொருட்கள் ஏதும் வாங்கவில்லை. இருப்பினும் மின் கட்டணம் பல மடங்கு உயர்வாக இருப்பது எப்படி என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் அவரின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தனர். பின்பு மீட்டர் காட்டியபடி மின்கட்டணம் சரியாக உள்ளது உங்கள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மின் கசிவு அதிகமாக உள்ளது அதை சரி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள்.