கொரோனா ஊரடங்கால்ஐரோப்பியாவின் முதல் பணக்காரரான தொழிலதிபர் பொர்னார்டு அர்னால்டு ரூ. 2,28,000 கோடியை இழந்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு மருந்து இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் முடங்கி வைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வர்த்தக சந்தையில் அதன் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மைனஸ் என்ற அளவிற்கு சென்றது நாம் அனைவருக்கும் தெரியும்.
கொரோனா தொற்று தாக்கத்தால் பல்வேறு தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்து அதோகதியாகி நிற்கிறார்கள். அந்த வகையில் ஐரோப்பியாவின் நம்பர் ஒன் பணக்காரரான பொர்னார்டு அர்னால்டு பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. பாரிஸில் இருக்கும் இவரின் LVMH நிறுவனம் DIOR முதல் Fendi வரை உலகம் முழுவதும் ஆடம்பர பொருட்களை விற்கும் இவரது நிறுவனமானது கொரோனா அச்சுறுத்தலால் 19 சதவீதம் பங்குகளை இழந்துள்ளது. இதனால் இவரின் வருமானம் 2,28,000 கோடி குறைந்துள்ளது.