பிரதமர் மோடி…. இந்தியாவின் இயற்கை எரிபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிசக்தி துறையில் உலகில் மூன்றாவது சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூபாய் 24 ஆயிரம் கோடி வரை சேமித்து உள்ளது. அதோடு நாடு முழுவதும் தட்டுப்பாடு இன்று எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் நாட்டிற்கு 24 ஆயிரம் கோடி சேமிப்பு ஆகியுள்ளது. இதை வைத்து பல திட்டங்களை மத்திய அரசாங்கம் செய்யும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பதிவிட்டு வருகின்றனர்.